நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயகாந்தன் படித்தேன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயகாந்தன் படித்தேன்.

அம்மா கொடுத்தார்கள். 'உனக்குத் தான் ஜெயகாந்தன் என்றால் பிடிக்குமே!' என்று சொல்லி, என் கைகளில் கொடுத்தார்கள். மறுக்க முடியாமல் வாங்கி வந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்!

அம்மாவுக்கு எப்படி தெரியும், இப்பொழுது எல்லாம் காண்ரேக்ட்களையும், தொழில் சம்பந்தப்பட்ட செய்திகளையும் படிப்பதற்கே நேரம் போதுவதில்லை என்று?

வாங்கி வந்தது இரு வாரங்கள் தொடப்படாமலேயே ஒரு ஓரத்தில் இருந்தது. மூன்று தினங்களுக்கு முன், அம்மா 'அந்த புத்தகத்தை திருப்பித் தாடா. நான் படிக்க வேண்டும்' என்றார்கள். 'இன்னும் பத்து நாட்களில் கொடுக்கின்றேன்', என்று நேரம் வாங்கிக் கொண்டேன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயகாந்தன் படிக்கத்தான் செய்வோமே!

மூன்று தினங்கள், நான் வேறொரு உலகத்துக்குள் சஞ்சரிக்க தொடங்கினேன். அந்த உலகம், கஷ்டங்களும் நஷ்டங்களும், தனிமையும் மேன்மையும், மாறி மாறி ஏற்பட்டு, ஒரு நிமிடம் நம் கண்கள் வேதனையில் பனிக்கின்றன; மறு நிமிடம், காதலால் கனிகின்றன. ஏற்க முடியாத முடிவுகளை எடுக்கும் பாத்திரங்கள்; மறுக்க முடியாத மறக்க முடியாத நிகழ்வுகள்! அந்த உலகம், ஜெயகாந்தனின் உலகம்!

ஒவ்வொரு கலைஞனின் உலகமும் தனி! அது எந்த துறையின் கலைஞனாக இருந்தாலும் சரி!

ரஜனிகாந்தைப் போல் நிறைய பேர் செய்யலாம். ஆனால் உண்மையான ரஜனி வேறு! அதற்கு காரணம் அந்த கலைஞனின் பார்வை தான்!

எல்லோரும் பார்க்கும் உலகத்தைத்தான் அவனும் பார்க்கிறான். ஆனால், அவன் பார்வை வேறு. அவன் கோணம், மாறுபட்டு இருப்பதால் அவன், கலைஞன் ஆகிறான்.

ஒரே பெண்ணை சாதாரண ஓவியர் வரைவதற்கும், ரவிவர்மா வரைவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லையா?

இருப்பதை இருப்பது போல் சித்தரிப்பவன் கலைஞன் அல்ல! இல்லாததையும் இருப்பதில் காண்பவன் தான் கலைஞன் ஆகிறான்! அதனால் தான், எந்த ஒரு கலைஞனும் முதலில் ஒரு சிறந்த ரசிகனாக இருந்து பின்னரே ஒரு கலைஞனாக உரு மாறுகிறான்.

கலையின் இன்னொரு சிறப்பு என்னவென்றால், பார்ப்பவர்களை அது தன்னுடைய உலகத்திற்கு அழைத்து சென்றுவிடும். அந்த உலகத்தில் கொஞ்ச காலம் நம்மை வாழவிட்டு, அந்த உலகத்தில் வாழ மாட்டோமா என்ற ஏக்கத்தை, ஒரு தாக்கத்தை நம்மிடத்தில் ஏற்படுத்தி விடுகிறது. அது ஒரு பிச்சைக்கார உலகமாக இருந்தாலும் சரி, அடிமை வாழ்வை பரப்புகின்ற இறந்து போன காலமாக இருந்தாலும் சரி, அதில் வாழ மாட்டோமா என்ற ஏக்கத்தை நம் மனதில் கூட்டி விடுகிறது.

அந்த காதலி ஒரு பைத்தியக்காரி போல் நடந்து கொண்டு இருந்தாலும், அது ஏன் நம் மனம், நம் காதலியும் அதே பைத்தியக்காரத்தனத்தை செய்யக்கூடாதா என்று ஏங்குகிறது?

அது கண்டீப்பாக அந்த கலைஞனின் படைப்பின் ரகசியம் என்றே சொல்ல வேண்டும்!

1960களில் எழுதப்பட்டவை, நான் படித்த இக்கதைகள். இன்றும் கூட அந்த கருத்தக்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா, என்பது மகத்தான கேள்விக்குறித்தான். ஆனால் அதிகம் பேர் அந்த வாழ்க்கையை, அது போன்ற மாற்றங்களை இன்று ஏற்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

மறுமணங்கள், மாறு பட்ட திருமணங்கள் என்பவை நடைமுறை வழக்கில் வந்த விட்ட காலம் இது. பெண்ணிற்கு சம உரிமை அல்ல, அதையும் தாண்டி, சிறப்பு உரிமை என்றும் பிறப்பு உரிமை என்றும் வழங்க தயாராகும் காலம் இது.

இருந்தாலும், ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும், அதே வரிகள் வேறு அர்த்தத்தை கொடுக்கிறதே, அது எப்படி? நாம் மாறிப்போகிறோம். நம் எண்ணங்கள் மாறிப்போகின்றன. அதனால் நம் பார்வையும் மாறிப்போகின்றது. படிக்கப் பட்ட, பார்க்க பட்ட ஒன்று, படிக்க படாத பார்க்க படாத ஒன்றாகவே இருக்கின்றது.

அதே பெண் தான். இருபது வருடங்களுக்கு முன்பாக பார்த்த அதே பெண்தான். ஆனால், இன்று இருப்பவள், அவளா என்ன?அவள் வேறாக தெரிகிறாள். அதனால் தான், எவ்வளவு முறை படித்தாலும் அலுக்காத புத்தகமாக அவள் காட்சி அளிக்கிறாள்!

அது போலத்தான் இந்த புத்தக வரிகளும். சிறு வயதில் படித்ததை மீண்டும் படித்தேன். இப்பொழுதுத் தான் அதை புரிந்து கொண்டேனோ? ஒரு வேளை, இருபது வருடங்களுக்கு பிறகு, மீண்டும் படித்தால் வேறாக புரிந்து கொள்வேனோ?


Comments

  1. Dear Shathakumar,
    I have read several stories of Jayakanthan.I dont know which story you are telling.In the present scenerio Jayakanthan will not be placed at heights because so many reforms and thinking now developed.To my view his stories are ordinary only.

    ReplyDelete
  2. சாந்தகுமாருக்குள் ஒரு கலைஞன் ! அருமை நண்பனே..!

    ReplyDelete
  3. Dear Shanthakumar,
    I have read several stories of Jayakanthan. Which story you are referring ? In the present Scenerio his stories will not be placed in heights.Because lot of thinking and reforms happened silently with out any inspiration from his writings.
    His translated books carry strong themes than his originals.I dont think his stories will impact more on society.To my view his writing are normal one..
    Yours... VPS

    ReplyDelete
  4. Dear Shanthakumar,
    So what I feel is your writing seems to me a customary one .i dont see any in depth analysis about Jayakanthan.
    ...VPS

    ReplyDelete
  5. More over you need not try hard to understand his themes.

    ReplyDelete
  6. Thanks, Somes and thanks VPS.

    No, I am not analysing any specific story of Jayakanthan. Many of the stories stay in ones minds for some reason or the other. He portrays the life of simple and common people and gives image to a lateral thinking. I just wanted to talk about it. No specifics but my own thoughts on stories and their impact on our lives form the backdrop for my observations.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Last Week in Power... the Tamil Nadu scene

யாருக்கு நம் ஓட்டு?