ஜல்லிக்கட்டு - எதற்காக இந்த ஆர்ப்பாட்டம்?

கைக்கயூர், கோத்தகிரி அருகே உள்ள ஓர் கிராமம். இதில் பழங்காலத்து ஓவியங்கள் பல கண்டு எடுக்கப்பட்டுள்ளன. 2005ஆம் ஆண்டு, மூவாயிரத்து ஐனூறு வருடங்களுக்கு முன்னால் வரையப் பட்ட இவ்வொவியங்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இவைகள் மஞ்சுவிரட்டு ஓவியங்கள்! கறுப்பு வெள்ளை மற்றும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பல நிறங்களிலும் தீட்டப்பட்ட ஓவியங்கள்.

இதே போல், மதுரைக்கு அருகே மேட்டுப்பட்டி என்னும் கிராமித்திலும் ஓவியங்கள் தீட்டப் பட்டிருக்கின்றன. இவை எருது கட்டுதல் என்னும் இன்னொரு விளையாட்டை குறிக்கின்றது. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இப்படி பல இடங்களில் பல விதங்களில், மஞ்சிவிரட்டு, எருது கட்டுதல் போன்ற விளையாட்டுக்கள் சித்தரங்களாகவும், கல்வெட்டுக்களாகவும் எழுதப்பட்டு இருக்கின்றன.

ஆனால், எங்கும் ஜல்லிக்கட்டு என்ற பெயரிலோ, இன்று நடை பெறுகின்றதைப் போன்ற விளையாட்டோ சித்தரிக்க படவில்லை!

இந்த விளையாட்டு எப்படி ஏற்பட்டது?

ஏறக்குறைய ஐனூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஜமீந்தார்களின் ஆதீக்க காலங்களில், அவர்கள் இதை ஒரு வேடிக்கை விளையாட்டாக ஊக்குவித்தார்கள். அதற்காக, அதன் கழுத்தில் பொன் முடிப்பு வைக்கப்பட்டிருந்தது. ‘சல்லி’ என்றால் காசு. காசு கட்டப்பட்டது என்பதை தான், சல்லிகட்டு அல்லது ஜல்லிகட்டு என்று அழைக்கிறார்கள்.

500 ஆண்டுகளுக்கு முன்னால் தான், முதன்முறையாக, காளைகள் இதற்காக வளர்க்கப்பட்டன. ஜமீந்தார்கள் வெறி கொண்ட காளைகளை அதை அடக்க வந்தவர்கள் மீது ஏவினார்கள். அதில் அடக்க வந்தவர்கள், பார்க்க வந்தவர்கள் என்று ஏராளமானவர்கள் மாண்டு போனார்கள்; அடி பட்டார்கள்! இதில் காளைகளும் மாண்டு போயின; அடிபட்டு முடமாய் வாழ்ந்தன.

இதுதான் உண்மை!

இன்றும் இந்த விளையாட்டு அதே வடிவில் நடக்குமானால், அதுவே தான் விளையும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

அப்படி என்ன பிரச்சனை அந்த வடிவில்?

மஞ்சுவிரட்டு என்பது எருதுகளோடு ஆண்கள் ஓடுவார்கள். யார் அதிவேகமாக ஓடி, காளைகளுக்கும் முன்னால் வருகிறார்கள் என்பதே போட்டி. இதில் காளைகளை யாரும் தொடுவார் இல்லை.

மாறாக, எருதின் கழுத்தில் கயிறு கட்டியிருக்கும். ஓடும் எருதை துரத்திப் பிடிக்க வேண்டும்; அதே கயிற்றை கொண்டு கட்ட வேண்டும். இது தான் எருது கட்டுதல்!

இந்த விளையாட்டுகளில் எல்லாம் எருதுகளுக்கோ பார்க்க வந்த மக்களுக்கோ, விளையாட வந்தவர்களுக்கோ எவ்வித பதிப்பும் இல்லை.

இன்று நடக்கும் முறையில், சுற்றியும் வேலி அமைக்கப்பட்ட விளையாட்டு திடல் இருக்கும். பார்வையாளர்களுக்கு சாதாரணமாக பாதுகாப்பு இல்லை என்பதால், அவர்கள் வேலிக்கு வெளியே உட்கார வைக்கப்படுவர்.

விளையாடுபவர்கள் திடலில் இருப்பர். ‘வாசல்’ வழியாக ஒரு காளை தனியாக உள்ளே அனுமதிக்கப்படும். அதை சாதாரணமாக உள்ளே விட்டால், அது வந்து ஓரமாக நின்று கொள்ளும்! அப்படி நின்று கொண்டால், எங்கே விளையாடுவது?

அதனால், அதனை பயமுறுத்தும் வண்ணம், மத்தளங்கள் முழங்கப்படும்; மக்கள் பூமி அதிர சத்தம் செய்வார்கள். இதையெல்லாம் கேட்ட காளை பயந்து மிரண்டு ஓடும். அதை இப்பொழுது ஆண் பிள்ளைகள் அடக்க முற்படுவார்கள். அதுவோ இவர்களிடம் இருந்து தப்பித்து ஓடும்; துள்ளி குதிக்கும்!

இப்பொழுது தான், விளையாட்டு சூடு பிடிக்கும்; எல்லோரும் உற்சாகம் ஏற்றடு, உச்ச ஸ்தாயியில் அலறுவார்கள். அது அந்த மாட்டை இன்னும் வெறுண்டு ஓட வைக்கும். பயந்த மாடு தறிகெட்டு ஓடும். இந்த ஓட்டத்தில் அது நடுவில் நிற்பவர் யாராய் இருந்தாலும், அவர்களை உதைத்து, முட்டி தள்ளிவிட்டு தலை தெறிக்க ஓடும்!

இதில் மாடும் அடிபடும்; ஆட்களும் அடி படுவர். வேறு எப்படி நிகழும் இது?

மாட்டை பயமுறுத்தாமல், அவர்களால் மாட்டை ஓட வைக்க முடியாது. அப்படி இருக்கையில், மாட்டை எங்கே அன்புடன் நடத்துகிறார்கள்?

இவை எல்லாம் எதற்காக? பணமுடிப்பிற்காக! பல்லாயிரகணக்கில் பணம் எல்லோருக்கும் கிடைப்பதால்! சரி. இதையும் பணம் இல்லாமல் யாருக்கும் இதில் லாபம் இருக்க கூடாது என்று நடத்தட்டும். எத்தனை பேர் இதனை ஏற்பார்கள்? எத்தனை பேர் இதனை ஒரு விளையாட்டு என்று விளையாடுவார்கள்?

சரி, நாம் இன்னொரு புள்ளி விவரத்திற்கு வருவோம்!

இந்த விளையாட்டை எத்தனை பேர் விளையாடுகிறார்கள்? எத்தனை காளைகள் இந்த விளையாட்டில் ஈடுபடுத்தப் படுகிறது?ஆயிரம் பேருக்கும் குறைவாக விளையாடுகிறார்கள். ஐம்பதுக்கும் குறைவாக காளைகளே இதில் ஈடுபடுகின்றன. இவ்வளவு குறைவானவர்களே விளையாடும் இந்த விளையாட்டுக்கு இத்தனை முக்கியத்துவம் வேண்டுமா?

இன்னொரு விவரம். இது போன்று மிரகங்களுடன் சண்டையிடும் விளையாட்டுக்கள் ஆயிரக்கணக்கில் உலகம் பூராவும் பரவிக்கிடந்தன. இவைகள் பல விதமானவை. ஒரு சில மிரகங்களின் கொலையில் முடியும். பல மிரகங்கள் அடிபட்டு, மனிதர்கள் அடிபட்டு காயங்களுடன் முடியும். இன்னும் சில, மிருகங்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே நடப்பவை. அதில் சில சமயங்களில் இரண்டுமே மாண்டு போகும்; பல சமயங்களில் ஒன்று பிழைக்கும்!

இவைகள் அத்தனையும் பாரம்பரியமான விளையாட்டுக்கள் தான். அந்த நாட்டில், அதற்கான காரணங்கள் இருந்தன. ஆனாலும், கொலை வெறியுடனும், மிருகங்களையும் மக்களையும் துன்புறுத்தும் இது போன்ற விளையாட்டுக்களை தடை செய்தார்கள். இப்பொழுதும் இதற்காக தர்க்கம் செய்து கொண்டு இருக்கும் ஒரே இடம் நம்மூர் தான்! மற்றவர்கள் எல்லோரும் கடையை சாத்திவிட்டார்கள்.

ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சொல்லுபவர்களின் இன்னொரு வாதம், ஆடுகளை கொல்லுகிறார்கள், மாடுகளை கொல்லுகிறார்கள், கோழிகளை கொல்லுகிறார்கள். இவையெல்லாம் தவறாக தெரியவில்லையா?

நமது உலகத்தில், மனித உயிர்களும், மனித வாழ்வும் மற்ற உயிர்களைவிட முதன்மையானதாகிவிட்டது. அதனால், இரைச்சிக்காக இன்னொரு உயிரை கொல்லுவது என்பது சாதாரணமாகிவிட்டது. இருந்தாலும், அதையும் செய்யும் முறைப்படித்தான் செய்ய வேண்டும் என்பது சட்டம். அந்த உயிர்களுக்கு மிக குறைந்த துன்பத்தை கொடுக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

மீறி செய்வது தவறு தான். ஒரு தவறு தப்பிவிட்டது என்பதால், இன்னொரு தவறு நடை பெறலாம் என்று அர்த்தம் அல்ல.


ஜல்லிக்கட்டுக்கு பதிலாக தயவு செய்து, வேறொரு வீர விளையாட்டை கண்டு பிடியுங்கள். வாள்வீச்சு, வில்வித்தை, வேல்வீச்சு என்று பல இருக்கின்றன. இதில் எதை எடுக்கப் போகிறீர்கள்? எதில் உலகத்தை வெல்ல போகிறீர்கள்?

Comments

Popular posts from this blog

யாருக்கு நம் ஓட்டு?

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயகாந்தன் படித்தேன்.