யாருக்கு நம் ஓட்டு - பாகம் 2.
நம் வேலை என்ன? நம் மாமன்ற, சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் வேலை என்ன? இதையெல்லாம் புரிந்த கொள்ள வேண்டும் என்றால், நாம் நமது குடியரசு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்த குடியரசு ஒரு மாபெரும் இயந்திரம்! மக்களாலும் சட்டங்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயந்திரம். இது மக்களால் உபயோகப்படுத்தப்படும், சட்டங்களுக்கு உட்பட்டு. சட்டங்கள் இந்த இயந்திரம் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதை சொல்லும். இதில் வேலை செய்ய மூன்று பகுதிகள் அல்லது பாகங்கள் உண்டு. முதலாவது, சட்ட பாகம், இரண்டாவதாக, செயல் பாகம். மூன்றாவதாக, நீதி பாகம். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், மக்கள் தான் இந்த குடியரசு இயந்திரத்தை இயக்குபவர்கள். மக்களுக்கு தேவையான சட்டங்களை செய்வது சட்ட பாகம். இந்த சட்டங்கள் முக்கியமானவை. இந்த சட்டங்கள் என்ன சொல்லுகின்றனவோ, அதைத்தான் மற்ற இரு பாகங்களும் செய்யும். ஆரம்பக்காலத்தில் என்ன சட்டங்கள் எல்லாம் தேவையோ அதை மக்கள் சொன்னார்கள். இந்த சட்டபாகம் அதை செய்து கொடுத்தது. அதை நாம் அரசியல் சாசனம் என்கிறோம். மக்களுக்கு புதிய தேவைகள் வரும் பொழுது புதிய சட்டங்களை உருவாக்க, இந்த சட்டப...